Archives: ஏப்ரல் 2016

இயேசு கண்ணீர்விட்டார்

நான் ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்த பொழுது என் சிநேகிதி ஒருத்தி, நான் அப்படி என்ன வாசிக்கிறேன்? என்று குனிந்து உற்று நோக்கினாள். அவள் திகிலடைந்தவளாய் என்னைத் திரும்பிப்பார்த்து, “என்ன பயங்கரமான தலைப்பு?” என்று கூறினாள். நான் கிரிம் எழுதிய தேவதைகள் செயல்படும் கட்டுக்கதையாகிய “கண்ணாடி சவப்பெட்டி” என்ற கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். சவப்பெட்டி என்ற வார்த்தை அவளைக் கலக்கத்திற்குள்ளாக்கியது. நம்மில் அநேகருக்கு மரணத்தைப் பற்றி நினைவுகூர்வது ஓர் விரும்பப்படாத காரியம். உண்மையாதெனில் 1000 பேர் வாழ்ந்தால், 1000 பேரும் மரித்துதான் போவார்கள்.…

தேவனுடைய வழி

நாம் கட்டாயம் தேவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இரு சிறு பிள்ளைகளைத் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு நாங்கள் எங்கள் வீட்டில் வைத்து வளர்க்க கேட்டுக்கொள்ளப்பட்ட பொழுது, அவர்களுடைய வருங்காலத்தைப் பற்றி நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டியதாயிருந்தது. வயதுவந்த எங்கள் மூன்று பிள்ளைகளுடன், பள்ளிச் செல்லாத இரண்டு பிள்ளைகளுக்கு வளர்ப்புப் பெற்றோராக இருப்பது எங்கள் வாழ்க்கை முறைக்கு ஒவ்வாதாகவும், குடும்பம் இருமடங்கு பெரிதானதால் வேலைப்பளுவும் அதிகமாகும் நிலை ஏற்படும். ஊழியப் பாதையில் நீண்ட கால அனுபவமுள்ள மிஷனரி ஏமி கார்மிக்கேல் அம்மையார் எழுதிய “எங்கள் அனுதின…

வர்ணம் தீட்டும் தேவன்

1402-1472ம் ஆண்டில் வாழ்ந்த நெசாஹால்கொயோட்டில் என்பவரின் பெயர் உச்சரிப்பதற்கு கடினமானது. ஆனால் அவருடைய பெயர் மிகவும் அர்த்தமுள்ள பெயர். அதன் அர்த்தம் என்னவென்றால் “பசியிலிருக்கும் ஓநாய்”. அவர் எழுதும் நூல்கள் ஆத்தும பசியை வெளிக்காட்டுபவையாகக் காணப்படும். இவன், மெக்ஸிக்கோவின் ஆட்சியாளராகவும், கவிஞனாகவும் இருந்தான். ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னரே “நான் வணங்கும் தெய்வங்கள் கல்லான விக்கிரகங்கள் அவற்றிற்கு பேச்சும் இல்லை, உணர்வும் இல்லை… மிகவும் வல்லமையுள்ள கண்ணுக்கும் புலப்படாத நாம் அறியாத தெய்வம்தான் அண்ட சராசரங்களையும் சிருஷ்டித்தவர்” என்று எழுதியிருந்தான். “அவர் ஒருவரே எனக்கு துன்பத்தில்…

வழக்கத்திற்கு மாறான தந்திரம்

1980ம் ஆண்டு பாஸ்டன் மரத்தான் ஓட்டத்தின் பொழுது ஒரு பெண் சுரங்கப்பாதையில் செல்லும் இரயிலில் ஏறிக்கொண்டார். அது ஒரு பெரிய காரியமல்ல. ஆனால் ஒரு காரியம். அவள் மரத்தான் ஓட்டத்தில் ஓட வேண்டியவள்! முடிவுக் கோட்டிற்கு ஒரு மைலுக்கு சிறிது தூரத்தில், இரயிலிருந்து குதித்து ஓட்டப்பந்தயத்தில் ஒருவருடன் சேர்ந்து கொண்டதைப் பார்த்தவர்கள் இதைப் பின்னால் கூறினார்கள். ஓட்டப் பந்தயத்தில் ஓடிய பிற பெண்களைவிட, முன்னால் ஓடி முடிவு கோட்டைத் தாண்டினாள். அவளுக்கு மூச்சு வாங்கவோ, அதிகமாய் வியர்க்கவோ இல்லை. கொஞ்ச நேரத்திற்கு அவள் வெற்றி…

பச்சோந்தி நகர்வு

நாம் பச்சோந்தியை பற்றி நினைக்கும் பொழுது, அது தான் வாழும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் திறமையைப் பற்றி சிந்திப்போம். ஆனால் இந்த பல்லியினப் பிராணிக்கு மற்றுமோர் வேடிக்கையான பண்பும் உண்டு. பல முறை ஒரு பச்சோந்தி, தான் நடந்து செல்லும் பாதை வழியாக நடந்து செல்வதைப் பார்த்து, இது தான் போய் சேரவேண்டிய இடத்தை சேர முடியுமா என்று ஆச்சரியப்பட்டிருக்கிறேன். வேண்டாவெறுப்பாக அந்த பச்சோந்தி தன் ஒரு காலை விரித்து வைக்கும், பின் தன் மனதை மாற்றி மீண்டும் முயற்சிக்கும். தான்…